மார்செயில் துப்பாக்கிச்சூடு! - ஒருவர் பலி!!

26 மார்கழி 2023 செவ்வாய் 09:49 | பார்வைகள் : 8644
மார்செய் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். டிசம்பர் 25, கிறிஸ்மஸ் நாள் அன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Marseille (Bouches-du-Rhône) நகரில் 15 ஆம் வட்டாரத்தின் rue de Lyon வீதியில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு அவர்கள் வருகை தரும்போது, *ஆயுதாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். வயது குறிப்பிடப்படாத ஒருவரது சடலத்திஅ மீட்டுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூடாக இது இருக்கலாம் என சந்தேகம் வலுக்கிறது.
மார்செய் நகரில் இவ்வருடத்தில் இடம்பெற்ற 48 ஆவது கொலைச் சம்பவம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025