2024 தேர்தலில் பாண்டியன் போட்டியா? ஆளும் பிஜு ஜனதா தளம் விளக்கம்!
16 மார்கழி 2023 சனி 08:08 | பார்வைகள் : 7280
ஒடிசா சட்டசபை தேர்தலில், முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான வி.கார்த்திகேயன் பாண்டியன், 49, போட்டியிட மாட்டார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களில் செய்தி
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, 2024 ஏப்., - மே மாதங்களில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுடன், சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடக்கவுள்ளது. <br><br>ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராகவும், அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராகவும் பணியாற்றிய, தமிழகத்தின் வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வி.கார்த்திகேயன் பாண்டியன், நவ., 27ல், ஆளும் பிஜு ஜனதா தளத்தில் முறைப்படி சேர்ந்தார்.
இதையடுத்து, அடுத்த ஆண்டு நடக்கஉள்ள சட்டசபை தேர்தலில், அவர் போட்டியிட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று, புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பிஜு ஜனதா தளத்தின் துணை தலைவர் டெபி பிரசாத் மிஸ்ரா கூறியதாவது: சட்டசபை தேர்தலில் வி.கார்த்திகேயன் பாண்டியன் போட்டியிடுவது குறித்து, ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
பிரச்னை இல்லை
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, அவர் எங்களிடம் தெளிவுபடுத்தி உள்ளார். அவர் விருப்பப்பட்டால் தேர்தலில் போட்டியிடலாம்; அதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. <br><br>இவ்வாறு அவர் கூறினார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan