Paristamil Navigation Paristamil advert login

காசா நகர் மீது தீவிரமான குண்டு வீச்சு! மீண்டும் துண்டிக்கப்படும் இணைய சேவைகள்

காசா நகர் மீது தீவிரமான குண்டு வீச்சு! மீண்டும் துண்டிக்கப்படும் இணைய சேவைகள்

6 கார்த்திகை 2023 திங்கள் 09:38 | பார்வைகள் : 9036


ஹமாஸ் இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சுற்றி வளைத்து இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டும் வரை இந்த போர் தாக்குதலை நிறுத்த போவது இல்லை என இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.

காசாவிற்கு நுழைந்து தாக்குதல் நடத்தும் அனைத்து இஸ்ரேலிய வீரர்களையும் பைகளில் திருப்பி அனுப்புவோம் என ஹமாஸ் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் காசா நகர் மீது தீவிரமான குண்டு வீச்சு தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி இருப்பதாக ஹமாஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி அனடோலு தெரிவித்துள்ளது.

உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ள தகவலின் படி, போர் தொடங்கிய 30 நாட்களில் காசா இதுவரை பார்த்திராத குண்டு வீச்சு தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் இப்பகுதிகளில் மீண்டும் தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்