அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து! 49 பேர் மாயம்

15 கார்த்திகை 2023 புதன் 13:02 | பார்வைகள் : 7194
ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் வரும் தொகையானது அதிகரித்தே காணப்படுகின்றது.
அதாவது அகதிகள் அவர்களின் உயிர் இழப்பு ஏற்பட்ட போதிலும் கடல் மார்க்கமாக பயணத்தை மேற்கொள்கின்றார்கள்.
இந்நிலையில் அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
படகில் பயணித்த 49 பேரைக் காணவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
யேமன் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த படகு 75 பேருடன் சென்றுகொண்டிருந்த போது வேகமாக வீசிய காற்றில் நிலைகுலைந்து இந்த அனர்தம் நேர்ந்ததாக கூறப்படுகிறது.
விபத்துப் பகுதியிலிருந்து 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 49 பேர் காணாமல் போயுள்ளதாக யேமன் கடலோரக் காவல்படையினர் குறிப்பிட்டுள்ளனர்