பரிஸ் : கணவருக்கு கத்திக்குத்து! - மனைவி கைது!!
14 கார்த்திகை 2023 செவ்வாய் 11:45 | பார்வைகள் : 10614
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். அவரது மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் அவரது கணவரைக் கத்தியால் குத்தியுள்ளார். அவர்களின் இரு பெண் பிள்ளைகள் காவல்துறையினரை அழைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நபரின் சடலத்தை மீட்டதோடு, அவரது மனைவியையும் கைது செய்தனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கைப்பற்றப்பட்டது.
இருவருக்கும் இடையே இடம்பெற்ற வாக்குவாதம், கைகலப்பாக மாறி கத்திக்குத்து தாக்குதலில் முடிவடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரான்சில் கடந்த 2022 ஆம் ஆண்டு குடும்ப வன்முறை காரணமாக 118 பெண்களும், 27 ஆண்களும் என மொத்தமாக 145 பேர் பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan