எதிர்வரும் 2024 முதலாம் திகதி முதல் 'tickets-restaurant' உணவு வவுச்சர்களின் நிலைமை கவலைக்கிடம்.

14 கார்த்திகை 2023 செவ்வாய் 10:13 | பார்வைகள் : 10943
பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அடுத்து வரும் 2024ம் ஆண்டுமுதல் தங்களின் பழக்கத்தை மாற்றவேண்டும். வேலைத் தளங்களில் உனவுக்காக வழங்கப்படும் 'tickets-restaurant' உணவு வவுச்சர்களைக் கொண்டு பல்பொருள் அங்காடிகளில் எல்லாவிதமான உணவுப் பொருட்களையும் வாங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை 'tickets-restaurant' உணவு வவுச்சர்களைப் பயன் படுத்தலாம், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் உணவகங்கள் விரும்பும் பட்சத்தில் மட்டுமே உணவு வவுச்சர்களை ஏற்கலாம், அதேபோல் பல்பொருள் அங்காடிகளில் உடனடியாக உண்ணக்கூடிய தயாரிப்புகளான ரெடிமேட் சாண்ட்விச்கள் அல்லது மீண்டும் சூடுபடுத்த வேண்டிய பாஸ்தா, பீட்சா போன்ற உணவுகளுக்கு மட்டுமே 'tickets-restaurant' உணவு வவுச்சர்கள் மூலம் பணம் செலுத்தலாம், ஏனைய எந்த ஒரு பெருட்களை வாங்கும் போது உணவு வவுச்சர்களை பயன்படுத்த முடியாது.
இந்த சட்டம் கடந்த 2022ல் கொண்டு வரப்பட்ட போதும் உடனடியாக சாத்தியப் படுத்துவதில் இருந்த சிக்கல்களால் இரண்டு ஆண்டுகள் இழுபறி நிலையில் இருந்து அடுத்த ஆண்டு கட்டாயமாகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025