Paristamil Navigation Paristamil advert login

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா ?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா ?

10 கார்த்திகை 2024 ஞாயிறு 13:57 | பார்வைகள் : 706


பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அதன் 8வது சீசன் கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கப்பட்டது. கமல்ஹாசனுக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி, 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த ஒரு மாதத்தில் நடந்த எவிக்‌ஷனில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியேறினர். 4-வது வாரம் நோ எலிமினேஷன் என்பதால் யாரும் எலிமினேட் ஆகவில்லை.

இதனிடையே கடந்த வாரம் திடீர் ட்விஸ்ட் ஆக 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். பிக்பாஸ் வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 6 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்படுவது இதுவே முதன்முறை ஆகும். இதற்கு முன்னர் 7-வது சீசனில் 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே அனுப்பப்பட்டு அதில் ஒருவரான அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் ஆனார். அதனால் இந்த ஆண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த ஆறு பேருமே டம்மி பீஸாக இருப்பதாக உள்ளிருக்கும் போட்டியாளர்களே கருத்து தெரிவித்துள்ளனர். மந்தமாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியை விறுவிறுப்பாக பிக்பாஸும் பல்வேறு டாஸ்குகளை கொடுத்து பார்க்கிறார். ஆனால் அதெல்லாம் எடுபடவில்லை. இப்படி டல்லாக சென்றுகொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் 11 போட்டியாளர்கள் நாமினேட் ஆகி இருந்தனர். இதனால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் திடீர் ட்விஸ்டாக ஒரு போட்டியாளரை மட்டும் எலிமினேட் செய்துள்ளனர். அதன்படி முதலில் சாச்சனா தான் எலிமினேட் ஆனதாக கூறப்பட்ட நிலையில், அதில் திருப்புமுனையாக இறுதியில் சுனிதாவை எலிமினேட் செய்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கோழியாக வலம் வந்த சுனிதா, எந்தவித வேலையும் செய்வதில்லை என்றும் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் குறைவான வாக்குகளை பெற்று இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்