Paristamil Navigation Paristamil advert login

 4B    இயக்க போராட்டத்தில் அமெரிக்க இளம் பெண்கள்

 4B    இயக்க போராட்டத்தில் அமெரிக்க இளம் பெண்கள்

10 கார்த்திகை 2024 ஞாயிறு 14:00 | பார்வைகள் : 1259


4B இயக்கம் என்பது தென் கொரியாவில் முதன் முதலில் தோன்றிய இயக்கமாகும்.

4B என்பது கொரிய மொழியில் "இல்லை" என்ற பொருளைத் தரும் "bi" என்ற சொல்லிலிருந்து உருவானது.

இந்நிலையில் 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, அமெரிக்க பெண்களிடையே  4B இயக்கம் வேகமாகப் பரவி வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று நாட்டின் 47 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில் 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, அவருக்கு வாக்களித்த ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் வித்தியாசமான போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

4B இயக்கம் எனப்படும் இந்த இயக்க போராட்டத்தில் இளம் பெண்கள் பலர் இணைந்து வருகின்றனர்.

இந்த இயக்கத்தில் இணைந்த பெண்கள், ஆண்களுடன் டேட்டிங் செய்வதை, பாலியல் உறவு வைத்து கொள்வது, திருமணம் மற்றும் குழந்தை பெற்று கொள்வதை மறுக்கிறார்கள்.

டிரம்பின் வெற்றி அமெரிக்க பெண்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல பெண்கள் கருக்கலைப்பு மற்றும் தங்களின் பல உரிமைகள் மற்றும் சமத்துவம் குறித்து கவலை கொண்டுள்ளதன் வெளிப்பாடாக இது தொடங்குகிறது.
 

இது பெண்களின் சுதந்திரம் மற்றும் தேர்வுகள் குறித்தும், ஆண்களுடனான உறவுகள் குறித்தும் பல கேள்விகளை உருவாக்குகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்