நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!
10 கார்த்திகை 2024 ஞாயிறு 13:31 | பார்வைகள் : 727
தமிழ் சினிமாவில் மனதில் பதியும்படியான குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர்கள் வெகுசிலரே. அதில் டெல்லி கணேஷும் ஒருவர். இவர் கடந்த 1976-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னர் 1964 முதல் 1974 வரை இந்திய விமானப் படையில் பணியாற்றிய டெல்லி கணேஷை தன்னுடைய பட்டினப் பிரவேசம் படம் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் கே.பாலச்சந்தர். அதற்கு முன்னர் மேடை நாடகங்களிலும் நடித்து வந்திருக்கிறார்.
இதையடுத்து சினிமாவில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய டெல்லி கணேஷ், உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். இவர் குணச்சித்திர வேடங்கள் மட்டுமின்றி நகைச்சுவைஅ கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில்
சினிமா மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள டெல்லி கணேஷ், டப்பிங் கலைஞராகவும் இருந்து வந்தார். இப்படி சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்த இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. நடிகர் டெல்லி கணேஷுக்கு 80 வயது ஆகிறது. அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஆழ்த்தி உள்ளது.
டெல்லி கணேஷின் உடன் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அவரின் மறைவு செய்தி அறிந்து திரையுலகினர் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகின்றனர். அதுமட்டுமின்றி சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஞ்சலிக்காக வைக்கப்பtடுள்ள டெல்லி கணேஷின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.