ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
10 கார்த்திகை 2024 ஞாயிறு 13:05 | பார்வைகள் : 1165
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை இன்னும் சில மாதங்களில் 3வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.
இதற்கிடையில், மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் தொடர்ந்து ஆயுத உதவிக்கான கோரிக்கையை முன்வைத்து வருகிறது.
சமீபத்தில் கூட உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் மற்றும் X தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கலந்து உரையாடியது உலக அளவில் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைனின் ஆளில்லாத விமான தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வெளியான தகவல்களின் அடிப்படையில் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு கிட்டத்தட்ட 32 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் Sheremetyevo விமான நிலையத்தில் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.