ஒலிம்பிக் நிறைவடைந்த பின்னரும் வழமைக்கு திரும்பாத சாலைகள்..!

8 புரட்டாசி 2024 ஞாயிறு 17:57 | பார்வைகள் : 7454
பரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுக்கு வருகிறது. இந்த போட்டிகளுக்காக நெடுஞ்சாலைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், அவை உடனடியாக நீக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 11 புதன்கிழமை வரை சில சாலைகளில் மாற்றம் கொண்டுவரப்படாது. குறிப்பாக Porte de la Chapelle தொடக்கம் Roissy-Charles de Gaulle விமான நிலையம் வரை செல்லும் A1 நெடுஞ்சாலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் பாதைகள் புதன்கிழமையே அகற்றப்படும்.
அதேவேளை நாளை திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு சில சாலைகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.