Essonne : கத்திக்குத்து தாக்குதலில் 20 வயது இளைஞன் சாவு... இருவர் கைது..!

8 புரட்டாசி 2024 ஞாயிறு 18:31 | பார்வைகள் : 7419
Athis-Mons (Essonne) நகரில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்ட இருவரும் 18 மற்றும் 19 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கடந்த 3 ஆம் திகதி 20 வயதுடைய ஒருவரை கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்டிருந்ததாகவும், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Essonne மாவட்டத்தில் உள்ள Mazières மற்றும் Bergeries எனும் இரு அருகருகே உள்ள நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கிடையே தொடர்ச்சியாக மோதல் இடம்பெற்று வருவதாகவும், அதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.