கூட்டணிக்கு அச்சாரம் போட்ட உத்தவ்: டில்லியில் காங்., தலைவர்களுடன் சந்திப்பு
8 ஆவணி 2024 வியாழன் 03:00 | பார்வைகள் : 562
மஹாராஷ்டிராவில் சிவ சேனா உத்தவ் பால்தாக்கரே கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று டில்லி சென்று காங்., தலைவர்களை சந்தித்து பேசினார்.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே இண்டியா கூட்டணியில் உத்தவ் கட்சி உள்ளது.
இந்நிலையில் நேற்று டில்லி சென்றிருந்த உத்தவ் தாக்கரே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்.. தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.