ரஷ்யாவிற்குள் திடீர் தாக்குதலை மேற்கொண்ட உக்ரைன் படையினர்
7 ஆவணி 2024 புதன் 09:55 | பார்வைகள் : 1564
ரஷ்ய - உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு பெறாமல் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனிய படையினர் எல்லையை கடந்து வந்து ரஷ்யாவிற்குள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என ரஸ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த 300 பேர் எல்லை கடந்து ரஷ்யாவிற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுவதுடன், இவர்கள் 10 கிலோமீற்றர் வரை ஊடுருவி வந்ததாக ரஸ்ய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11 டாங்கிகள் 20க்கும் மேற்பட்ட கவசவாகனங்களின் உதவியுடன் இந்த தாக்குதலை உக்ரைனியபடையினர் முன்னெடுத்ததாகவும் ரஸ்ய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கேர்க்ஸ் பிராந்தியத்தின் எல்லை கிராமங்களிலும், முன்னரங்குகளில் இருந்து பத்து கிலோமீற்றர் உள்ளேயும் பல மணிநேரம் இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.