அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டி தொடர்பில் கருத்துக்கணிப்புகள்

7 ஆவணி 2024 புதன் 09:56 | பார்வைகள் : 9357
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ட்ரம்பை, அவரது எதிரணியினரான கமலா ஹரிஸ் முந்துவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் பெரிய கட்சி ஒன்றிற்குத் தலைமை ஏற்கும் முதல் இந்திய, ஆப்பிரிக்க வம்சாவளி பெண்ணான கமலா ஹரிஸுக்கு, அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சியினரில் 99 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்திய கருத்துக்கணிப்புகள், ட்ரம்பை கமலா ஹரிஸ் முந்துவதாக தெரிவித்துள்ளன.
கமலா ஹரிஸுக்கு 45.5 சதவிகித ஆதரவும், ட்ரம்புக்கு 44.1 சதவிகித ஆதரவும் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து விலகிய நேரத்தில், ட்ரம்புக்கு 45.2 சதவிகித ஆதரவும், கமலாவுக்கு 41.2 சதவிகித ஆதரவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.