Paristamil Navigation Paristamil advert login

 மறைந்த இங்கிலாந்து வீரர்.. இலங்கை ஜாம்பவான்கள் உருக்கமான பதிவு

 மறைந்த இங்கிலாந்து வீரர்.. இலங்கை ஜாம்பவான்கள் உருக்கமான பதிவு

7 ஆவணி 2024 புதன் 09:09 | பார்வைகள் : 559


மறைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரகாம் தோர்பேவுக்கு  இலங்கை, பாகிஸ்தான் உட்பட பல்வேறு ஜாம்பவான்கள் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப் (Graham Thorpe), தனது 55 வயதில் உயிரிழந்தது கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

100 டெஸ்ட்களில் விளையாடி சாதனை புரிந்த கிரஹாமின் மறைவு, முன்னாள் வீரர்கள் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஜாம்பவான் வீரர்கள் பலரும் தங்கள் இரங்கலை பகிர்ந்து வருகின்றனர்.

 இலங்கையின் குமார் சங்ககாரா தனது பதிவில், "தோர்ப் உங்கள் ஆன்மாக அமைதிகொள்ளட்டும். சிறந்த மனிதர் மற்றும் ஜாம்பவான். 

அவரின் குடும்பம், நண்பர்களுடன் எனது எண்ணங்கள் இருக்கும். விரைவிலேயே சென்றுவிட்டார்'' என கூறியுள்ளார்.

மற்றொரு இலங்கை ஜாம்பவான் சமிந்த வாஸ், "சிறந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப்பின் மறைவைக் கேட்டு ஆழ்ந்த சோகமாக உள்ளது'' என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில், "கிரஹாம் தோர்ப் இப்போது எங்களுடன் இல்லை என்பதை அறிந்துகொள்வது மிகவும் வருத்தமளிக்கிறது. 

இயற்கையாகவே திறமையான, சுதந்திரமாகப் பாயும் இடிபோல், அச்சமின்றியும் திறமையுடனும் விளையாடிய அவரது புகழ் எப்போதும் தனித்து நிற்கிறது. 

அவரது குடும்பத்தினருக்கும், நெருங்கியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி கொள்ளுங்கள் கிரஹாம்" என தெரிவித்துள்ளார்.   

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்