முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கொலை செய்ய திட்டம்
7 ஆவணி 2024 புதன் 09:05 | பார்வைகள் : 1233
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் பாக்கிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர் அமெரிக்க அரசியல்வாதிகளை கொலை செய்ய திட்டமிட்டார் என ஈரானுடன் தொடர்புகளை கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளை கொலைசெய்வதற்காக நபர் ஒருவரை அமர்த்துவதற்கு 46 வயது அசிவ் மேர்ச்சன்ட் முயன்றார் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் பொதுஅதிகாரி,அல்லது அமெரிக்க பிரஜையை கொல்வதற்கான வெளிநாட்டு சதி எங்களின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயம் என எவ்பிஐயின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.