மோசமான காலநிலை.. கோதுமை விளைச்சல் வீழ்ச்சி..!
7 ஆவணி 2024 புதன் 08:30 | பார்வைகள் : 1954
தொடர்ச்சியாக பதிவாகி வரும் மோசமான காலநிலை காரணமாக பிரான்சில் கோதுமை விளைச்சல் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1983 ஆம் ஆண்டின் பின்னர் பிரான்ஸ் இதுபோன்ற ஒரு நிலமைக்கு முகம் கொடுத்துள்ளது. 25.17 மில்லியன் தொன்களால் இந்த உற்பத்தி நடப்பு ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களுடன் ஒப்பிடுகையில் 18.7% சதவீத வீழ்ச்சியாகும். கடந்த இலையுதிர் காலத்தில் மிக அதிகளவு மழை பதிவாகியிருந்தது. இந்த மழை விவசாயத்தை பெருளவில் பாதித்திருந்தது. அதில் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தது கோதுமை உற்பத்தியாகும்.
பிரான்சின் விவசாய அமைச்சர் Marc Fesneau பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து உரையாடி வருகிறார். அவசியமான உதவிகள், இழப்பீடுகள் அவர்களுக்கு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.