ஜனாதிபதி வேட்பாளராகிய நாமல் ராஜபக்ஷ : வெளியான அறிவிப்பு
7 ஆவணி 2024 புதன் 04:10 | பார்வைகள் : 959
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை - நெலும்மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், கட்சியின் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.