மரதோன் போட்டி.. இரவு முழுவதும் இயக்கப்படும் மெற்றோக்கள்..!
6 ஆவணி 2024 செவ்வாய் 17:02 | பார்வைகள் : 3141
இம்மாதம் 10-11 ஆம் திகதிக்குட்பட்ட இரவில் இடம்பெற உள்ள மரதன் ஓட்டப்போட்டியினை அடுத்து, இரவு முழுவதும் சில மெற்றோ சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மரதன் ஓட்டப்போட்டி இரவு 9 மணிக்கு பரிசில் ஆரம்பித்து Versailles வழியாக Boulogne-Billancourt, Sèvres, Meudon மற்றும் Issy-les-Moulineaux நகர் வரை இடம்பெற உள்ளது. இதில் கிட்டத்தட்ட 40,000 வரையான பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி பெறாத வீரர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மேற்படி நகரங்களை இணைக்கும் 1, 2, 4, 5, 6, 8, 9 மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோக்கள் இரவு முழுவதும் இயக்கப்படும். குறிப்பிட்ட சில நிலையங்களில் மட்டும் நின்று பயணிக்கும். அவை தொடர்பான முழுமையான விபரங்களை கீழே உள்ள புகைப்படத்தில் காணலாம்.