Paristamil Navigation Paristamil advert login

சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் வைத்தியர் அர்ச்சுனா

சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் வைத்தியர் அர்ச்சுனா

6 ஆவணி 2024 செவ்வாய் 12:36 | பார்வைகள் : 1202


சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான்  இன்று திங்கட்கிழமை( 05) உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பிலேயே அருச்சுனா கைதாகியிருந்தார்.

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு, நகர்த்தல் பத்திரம் ஊடாக  இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல நீடித்து, மன்னார் நீதவான்   உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரம் அனுமதி இன்றி   வைத்தியசாலைக்குள்  நுழைந்து வைத்தியருடன்  காணொளி பதிவுகளை மேற்கொண்ட இருவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு   நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்