சுறா மீன்கள் உடலில் போதைப்பொருள் அறிவியலாளர்கள் அதிர்ச்சி
24 ஆடி 2024 புதன் 16:18 | பார்வைகள் : 2703
பிரேசில் நாட்டின் கடற்கரையோரமாக காணப்படும் சுறா மீன்களின் உடல்களில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் அறிவியலாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள Oswaldo Cruz Foundation என்னும் ஆய்வக அறிவியலாளர்கள், தெற்கு அட்லாண்டிக் கடற்கரையோரமாக நீந்திக்கொண்டிருந்த 13 Brazilian sharpnose sharks வகை சுறாக்களை ஆய்வு செய்துள்ளார்கள்.
அப்போது, அந்த சுறாக்கள் எல்லாவற்றின் கல்லீரல் மற்றும் சதையில், எக்கச்சக்கமாக போதைப்பொருப்பொருள் ஒன்று இருப்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
அதுவும், இதற்கு முன் சோதனைக்குட்படுத்தப்பட்ட கடல்வாழ் விலங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டதைவிட, 100 மடங்கு அதிக போதைப்பொருள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எப்படி அந்த சுறா மீன்களின் உடல்களில் இவ்வளவு போதைப்பொருள் வந்தது என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள்.
மூன்று விடயங்களால், இது சாத்தியமாகலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஒன்று, போதைப்பொருள் எடுத்துக்கொள்வோரின் மலம் மற்றும் சிறுநீரில் அந்த போதைப்பொருள் வெளியேறி, அந்தக் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமலே கடலில் கொட்டப்படுவதால்,
சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலைக் கழிவுகளை கடலில் கொட்டுவதால்,
கடத்தல்காரர்கள் பிடிபட்டுவிடுவோமோ என பயந்து கடலில் கொட்டிச் செல்லும் போதைப்பொருட்களை சுறாக்கள் உட்கொள்வதால் சுறாக்கள் உடலில் போதைப்பொருட்கள் சேரக்கூடும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
என்றாலும், மூன்றாவதாக கூறப்பட்டுள்ள விடயத்துக்கு சாத்தியக்கூறுகள் குறைவே என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
இந்த போதைப்பொருட்களை உட்கொள்வதால் சுறாக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
போதை தலைக்கேறி சுறாக்கள் மறைகழன்று திரியாது என்றாலும், போதைப்பொருள் அவற்றின் வாழும் காலத்தைக் குறைத்துவிடும் என்கிறார் Dr Tracy Fanara என்னும் அறிவியலாளர்.
ஆனாலும், சமீப காலமாக, கடலில் கொட்டப்பட்ட போதைப்பொருட்களை உட்கொண்ட சுறாக்கள், அமெரிக்காவில் சர்ஃபிங் விளையாட்டுக்குச் செல்வோரை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.