வானில் ஏற்படும் மாற்றம் - இலங்கையர்களும் அவதானிக்கலாம்
24 ஆடி 2024 புதன் 15:48 | பார்வைகள் : 1724
சூரிய குடும்பத்தில் வளையங்களை கொண்ட மிக அழகான கோளாக கருதப்படும் சனி புதன்கிழமை (24) இரவு வானில் இருந்து மறையவுள்ளது என தகவல் வௌியாகியுள்ளது.
சனி, சந்திரனுக்கு மறைவதால் இவ்வாறு ஏற்படும் எனவும் இது ஒரு வகையில் 'சனி கிரகணம்' போன்றதுடன் இது மிக அரிதான சம்பவம் எனவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வை புதன்கிழமை (24) நள்ளிரவு 12.50 மணி முதல் அதிகாலை 2.10 மணி வரை இலங்கையர்கள் காண முடியும் என ஆர்தர் சி கிளார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சனி, மீண்டும் அதிகாலை 2.20 மணிக்கு காட்சியளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.