Paristamil Navigation Paristamil advert login

குறைந்த விலையில் மெற்றோ பயணச்சிட்டைகள் வாங்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம்..!!

குறைந்த விலையில் மெற்றோ பயணச்சிட்டைகள் வாங்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம்..!!

17 ஆடி 2024 புதன் 17:44 | பார்வைகள் : 6485


ஒலிம்பிக் போட்டிகளின் போது மெற்றோ பயணச்சிட்டைகள் விலை அதிகரிப்புக்கு உள்ளாக இருக்கும் நிலையில், பழைய விலையில் மெற்றோ பயணச்சிட்டைகளை வாங்குவதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது €2.15  யூரோக்களாக உள்ள மெற்றோ பயணச்சிட்டையின் விலை இம்மாதம் ஜூலை 20 ஆம் திகதி முதல் €4 யூரோக்களாக அதிகரிக்கிறது. வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி வரை இந்த விலை உயர்வு நடைமுற்சியில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பத்து பயணச்சிட்டைகள் கொண்ட புத்தகம் ஒன்று €17.35 இல் இருந்து €32 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது.  

பேருந்து கட்டணமும் €2.50 யூரோக்களில் இருந்து €5 யூரோக்களாக உயர்வடைகிறது. 

எனவே பயணச்சிட்டைகளை பெற்றுக்கொள்ளவும், முன்பதிவுகள் செய்துகொள்ளவும் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்