Paristamil Navigation Paristamil advert login

எப்பபோதும் சந்தோஷமா இருக்கணுமா..?

எப்பபோதும்  சந்தோஷமா இருக்கணுமா..?

23 வைகாசி 2024 வியாழன் 13:12 | பார்வைகள் : 1273


மனிதராக பிறந்த எல்லோருக்கும் வாழ்க்கையில் கஷ்டங்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. படிப்பு , வேலை, குடும்பம், செலவு, சேமிப்பு, எதிர்காலம் என ஏதாவது ஒன்றைப் பற்றிய பயமும், கவலையும் துரத்திக்கொண்டு தான் இருக்கிறது. வாழ்க்கையே கணினி மயமாகி வருவதால் மக்களுக்கு மன அழுத்தத்திற்கு பஞ்சமில்லை. ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மன ஆரோக்கியத்திற்கும் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

வாழ்க்கையில் எந்த வகையான வலியை எதிர்கொண்டாலும் அவர்கள் நேர்மறையாக இருப்பதற்காக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் சில வாழ்க்கை மாற்றங்கள் உள்ளன. அவற்றை பின்பற்றினாலே போதும் உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். அவற்றை தான் இப்போது உங்களுக்கு சொல்கிறோம்.

மனம் விட்டு பேசுங்கள்: தற்போதைய ஆன்லைன் உலகத்தில் யாரும் பிறருக்காக நேரம் ஒதுக்கவோ, மனம் விட்டு பேசவோ விரும்புவதில்லை. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் என உங்களுடன் அன்பாக இருப்பவர்களுடன் சேர்ந்து நேரில் நேரம் ஒதுக்குங்கள். அவர்களுடன் உணவருந்துவது, வெளியே செல்வது, அன்றைய தினம் நடந்த விஷயங்களை விவாதிப்பது போன்றவற்றை செய்யலாம்.

உடற்பயிற்சி: சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மனஆரோக்கியத்திற்கும் நல்லது. நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது நமது மன நிலையும் ஆரோக்கியமாக இருக்கும். ஸ்விம்மிங், சைக்கிளிங், வாக்கிங், ஜாகிங் ஆகியவற்றை வழக்கமாக செய்யலாம்.

புது விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்: எப்போதும் நம்மை உயிர்ப்பாக வைத்துக்கொள்ள புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்வது நல்லது. மேலும் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் இது உதவும். ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது, தானாகவே புதிய மனிதர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். ஆனால் எதாக இருந்தாலும் உங்களுக்கு பிடித்ததை மற்றும் கற்றுக்கொள்ளுங்கள். பிடிக்காத விஷயங்களை கற்க முயலும்போது நிலைமை மேலும் மோசமடையும்.

பரிசளிப்பதும் இன்பமே: யாராவது நமக்கு பரிசு கொடுத்தால் அது எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதேபோல் தான் பிறருக்கு நீங்கள் பரிசளிக்கும் போது அதே அளவு மகிழ்ச்சியை உணர்வீர்கள் என்கின்றனர் நிபுணர்கள். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என யாருக்காவது சின்ன, சின்ன பரிசுக்களை கொடுத்து குஷிப்படுத்துவதோடு, போனஸாக மகிழ்ச்சியையும் பெறலாம்.

கடந்த காலத்திற்கு குட்பை: “நடந்து முடிந்த விஷயங்களை எப்போதும் மாற்ற முடியாது… ஆனால் அவற்றை நிச்சயம் கடந்து சொல்ல முடியும்”. எப்போதோ செய்த தவறை எண்ணி இன்று வரை வருந்துவதில் எவ்வித பயனும் இல்லை. அதேபோல் எதிர்காலத்தை நினைத்தும் கவலை அல்லது பயம் கொள்வது தேவையற்றது. எனவே எப்போதும் மனதை நிகழ் காலத்தில் வைத்திருங்கள். அப்போது தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்