Paristamil Navigation Paristamil advert login

ரஸ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்த கனடா...!

ரஸ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்த கனடா...!

23 வைகாசி 2024 வியாழன் 13:22 | பார்வைகள் : 4927


ரஸ்யாவின் மீது மேலும் தடைகளை அறிவிப்பதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்தமைக்காக இவ்வாறு புதிய தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் மீது வடகொரியாவிடமிருந்து கொள்வனவு செய்த ஆயுதங்களை ரஸ்யா பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ரஸ்யாவின் இரண்டு நபர்கள் மற்றும் ஆறு நிறுவனங்கள் மீது இவ்வாறு புதிய தடைகளை கனடா அறிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை போக்குவரத்து செய்வதர்களுக்கு எதிராக தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆயுதங்கள் உக்ரைன் மீதான தாக்குதல்களின் போது பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த தடை குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்