Paristamil Navigation Paristamil advert login

'பாரா' பாடலின் பாடகர், பாடலாசிரியர் யார்?

'பாரா' பாடலின் பாடகர், பாடலாசிரியர் யார்?

21 வைகாசி 2024 செவ்வாய் 13:33 | பார்வைகள் : 6615


உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2 ’படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த பாடலின் டைட்டில் பாடல் ஆசிரியர் பெயர்களை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

பாரா என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்துள்ளார் என்றும் இந்த பாடலை பா விஜய் எழுதியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பாடலின் ப்ரமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் முழு பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்