Paristamil Navigation Paristamil advert login

19 வைகாசி 2024 ஞாயிறு 15:13 | பார்வைகள் : 2474


யாழில் பலத்த மழை, காற்று - ஆலயத்தின் கூரை முற்றாக சேதம்

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மழையுடன் வீசிய காற்று காரணமாக ஆலயம் ஒன்றின் கூரை முழுமையாக சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இதனை தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/21 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆலயமொன்றின் கூரையே மழை மற்றும் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ளது. 

இருப்பினும், இதனால் யாருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்