பிரித்தானிய நாட்டில் விசா கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளியாகிய தகவல்
3 பங்குனி 2024 ஞாயிறு 15:02 | பார்வைகள் : 5042
பிரித்தானிய நாட்டில் இந்தாண்டு தேர்தல் ஆண்டாக கணப்படுவதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான விதிமுறைகளை காணக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
நாட்டின் பிரதான கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் ஆகிய இரண்டு கட்சிகளும் இப்போது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும்,
பிரித்தானியாவிற்கு வரும் சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருக்கின்றனர்.
"சென்ற ஆண்டு (2023) நிகர இடம்பெயர்வு 745,000 என்ற அதிகூடிய இலக்கை எட்டியுள்ளது.
இது மிகவும் அதிகமாக இருப்பதாக பல பிரித்தானிய மக்கள் கருதுவதாக" என்று மூத்த குடிவரவு நிபுணர் யாஷ் துபால் சுட்டிக்காட்டியுள்ளார்.