Paristamil Navigation Paristamil advert login

கனடாவிற்குள் பிரவேசித்த குடியேறிகளில் தற்போதைய நிலை...

கனடாவிற்குள் பிரவேசித்த குடியேறிகளில் தற்போதைய நிலை...

3 பங்குனி 2024 ஞாயிறு 13:46 | பார்வைகள் : 6301


கனடாவிற்குள் பிரவேசித்த குடியேறிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாங்கள் நாட்டுக்குள் பிரவேசித்து முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இவ்வாறு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நல்லதொரு வாழ்க்கையை எதிர்பார்த்து கனடாவிற்குள் பிரவேசித்த குடியேறிகள் அதிருப்தியுடன் வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 35 ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற குடியேற்றங்கள் தொடர்பிலான ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கனடாவிற்குள் பிரவேசித்து ஐந்து ஆண்டுகளுக்குள் சுமார் 5.1 வீதமானவர்கள் வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

குடியேறிகளை தக்க வைத்துக் கொள்வதற்கான மூலோபங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இளம் தலைமுறை குடியேறிகள் கனடாவை விட்டு வெளியேறுவதில் நாட்டம் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழில் வாய்ப்பு, வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு கனடாவை விட்டு வெளியேறுவதில் ஆர்வம் காட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

எழுத்துரு விளம்பரங்கள்