விஜய் ஆண்டனி பாலிவுட்டில் அறிமுகமாக போகிறாரா?
3 பங்குனி 2024 ஞாயிறு 10:02 | பார்வைகள் : 3880
பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் வள்ளி மயில், மலை பிடிக்காத மனிதன், ரோமியோ போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நந்திதா, ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் சி.எஸ். அமுதன் இயக்கியிருந்த இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அதை தொடர்ந்து இப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு யூட்டியூபில் வெளியிடப்பட்ட நிலையில் இந்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 20 லட்சம் பார்வையாளர்களை கடந்ததாக இயக்குனர் சி எஸ் அமுதன் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இதற்கு விஜய் ஆண்டனி, “அடுத்த படம் இந்தியில் பண்ணலாம் அமுதன்” என்று பதில் அளித்துள்ளார். எனவே விஜய் ஆண்டனி அடுத்ததாக பாலிவுட்டில் பாலிவுட்டில் அறிமுகமாக போகிறாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.