சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகர் சிவகுமார் ...!
26 மாசி 2024 திங்கள் 14:55 | பார்வைகள் : 1714
ஆண்டு "காக்கும் கரங்கள்" திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் சிவக்குமார்.கதாநாயகனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் என 175க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியவர் .
இவர் மட்டுமல்லாமல் இவரது மகன்களான சூர்யா, கார்த்தி ஆகியோரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள் .
இந்தநிலையில், திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டும் சிவகுமார் பங்கேற்று வருகிறார். இருப்பினும் சில சர்சைகளிலும் சிக்கி கொள்வதும் வழக்கமாகிறது .
அண்மையில் , இரசிகர் ஒருவர் தன்னுடன் செல்பி எடுக்க முயன்றபோது போனை தட்டிவிட்டார். இது வைரலாகி அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.அந்த சர்சையைத் தொடர்ந்து மீண்டும் சர்சையில் சிக்கியுள்ளார் .
சிவகுமாருக்கு வயதான முதியவர் ஒருவர் ஆசையாய் ஓடி வந்து சால்வை கொண்டு வந்து கொடுத்தார். அதை பிடுங்கி வெறுப்புடன் தூக்கி வீசி எறிந்துவிட்டு சென்றார் .
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.தொடர்ந்து சிவகுமார் பொது நிகழ்வுகளில் இதுபோன்று நடந்து கொள்வது இரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.