Paristamil Navigation Paristamil advert login

சூர்யாவின் அதிரடி...!

சூர்யாவின் அதிரடி...!

26 மாசி 2024 திங்கள் 14:52 | பார்வைகள் : 2496


நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 43-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்து இருக்கிறார். இதற்கிடையில், சூர்யா இனிமேல் தான் நடிக்கும் படங்களின் கதையை தேர்வு செய்ய முக்கிய கண்டிஷன் ஒன்றை போட்டு இருக்கிறாராம்.

அது என்னவென்றால், இனிமேல் ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்னதாக கதை கேட்கும்போது அந்த கதையை கேட்க நல்ல எழுத்தாளர் ஒருவரை கைவசம் வைத்துக்கொண்டு எத்தனை கதைகள் வந்தாலும் அந்த எழுத்தாளரிடம் கூறவேண்டும் என்பது தான். அந்த எழுத்தாளர் கதையை கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்த பிறகு தான் சூர்யா இயக்குனர்களிடம் கதைகேட்க முடிவு செய்து இருக்கிறாராம்.

தன்னிடம் யாராவது இயக்குனர் வந்து கதை சொன்னால் கூட அந்த எழுத்தாளரை தொடர்பு கொண்டு அவரிடம் கூறுங்கள் என்று சூர்யா கண்டிஷனும் போட்டு இருக்கிறாராம். இனிமேல் அந்த எழுத்தாளர் சொல்லும் கதையை தான் தேர்வு செய்து நடிக்க சூர்யா முடிவு எடுத்து இருக்கிறாராம்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்