Paristamil Navigation Paristamil advert login

பெண்கள் மீதான வன்முறை - உடனே அழைக்கவேண்டிய இலக்கம்!!

பெண்கள் மீதான வன்முறை - உடனே அழைக்கவேண்டிய இலக்கம்!!

19 மாசி 2024 திங்கள் 09:42 | பார்வைகள் : 2541


பெண்கள் தங்கள் மீது ஏவப்படும் வன்முறைகளை உடனடியாக அறிவித்து உதவிகளையும் பாதகாப்பையும் பெற பெண்களிற்கான பாதுகாப்பு இலக்கம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

3919 என்ற இலக்கம் பெண்கள் மீதான வன்முறைகளிற்கான உதவி இலக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான குடும்ப வன்முறை, கணவன் அல்லது துணைவனின் வன்முறை, பாலியல் வன்முறை, பாலியல் அடக்குமுறை, பாலியல் அச்சுறுத்தல், உளவியல் அச்சுறுத்தல், கட்டயாயத் திருமணம், உயிரச்சுறுத்தல்.....

என அனைத்து வன்முறைகளிற்கும் இந்த இலக்கத்திற்கு அறிவிக்கும் பொழுது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களிற்கான முழுமையான பாதுகாப்பும் வழங்கப்படும். வனமுறையாளர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

இந்த இலக்கமானது தேசிய பெண்கள் ஒற்றுமைக் கூட்மைப்பான FNSF (Fédération nationale solidarité femmes) இனால் வழிநடத்தப்படுகின்றது.

பெண்கள், வன்முறைகைளைச் சகித்துக்கொள்ளாமல் உடனடியாக அறிவிப்பதன் மூலமே, வன்முறையாளர்களையும் வன்முறைகளையும் தடுக்க முடியும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்