எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஒரு டொலருக்கு வாங்கிய வீடு; இப்போது அதன் மதிப்பு 5 லட்சம் டொலர்கள்!

6 May, 2023, Sat 3:56   |  views: 4667

அமெரிக்காவில் வாழும் இத்தாலி பெண் ஒருவர், ஒரு டொலருக்கு வீடு வாங்கி அதனை 5 லட்சம் டொலருக்கு விற்கப்பட்ட செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இத்தாலியிலுள்ள சிசிலி என்ற பகுதியில் 17ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட வீடுகள் ஏலம் விடப்பட்டுள்ளன. 
 
இந்த வீடுகளை ஒரு யூரோ, ஒரு வீடு என்ற திட்டத்தின் கீழ் இத்தாலிய அரசு ஏலமிட்டுள்ளது.
 
இந்த திட்டத்தை கவனித்த அமெரிக்காவில் வாழும் இத்தாலிய பெண் மெரெட்டின் டப்போனே என்பவர், ஒரு வீட்டை வாங்க திட்டமிட்டுள்ளார். இதன் படி அவர் 750 சதுரடி அளவிலான ஒரு வீட்டை ஏலத்தில் வாங்கியுள்ளார்.
 
அந்த வீட்டில் மின்சாரம், தண்ணீர் , கதவுகள் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் கிடையாது. இருந்தாலும் அந்த வீட்டை ஒரே மனதாக கடந்த 2019ஆம் ஆண்டு வாங்கியுள்ளார்.
 
மேலும் அந்த வீட்டிக்கு அருகே இருந்த இன்னொரு வீட்டையும், குறைவான தொகைக்கு வாங்கியுள்ளார்.
 
இதனை தொடர்ந்து அந்த இரு வீடுகளையும் இணைத்து 3000 சதுரடி அளவில் வீடாக கட்ட ஆரம்பித்துள்ளார். 
 
இதற்கான அவர் இரண்டாண்டுகள் முயற்சி எடுத்து $3 லட்சம் டொலர் செலவு செய்துள்ளார்.
 
புதிதாக கட்டப்பட்ட அந்த வீட்டில் 4 படுக்கை அறைகள், 4 குளியல் அறைகள், சமையலறை, வசிக்கும் அறை என சிறப்பாக கட்டியுள்ளது. 
 
இந்நிலையில் அந்த வீடு தற்போது 5 லட்சம் டொலர் மதிப்புக்கு விற்கப்பட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வெறும் 750 சதுர அடி நிலத்தை வாங்கி இவ்வளவு பெரிய தொகைக்கு விற்ற பெண்ணின் செயலை, இணையத்தில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.   
 
 
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18