எழுத்துரு விளம்பரம் - Text Pub

நானும் உன்னில் அடைகலம்

6 February, 2023, Mon 11:54   |  views: 2332

 யார் வலிகள்

தந்தாலும்
அனைத்துக்குமான
மருந்து
நீ மட்டுமே
எனக்கு
 
நீ
எத் தொலைவுக்கு
சென்றாலும்
என் நினைவின்றி
நீயில்லை
என்பதே
நம் காதலின்
வெற்றிதான்
 
என் கண்களின்
ஜீவன் உன்னில்
 
நீ தெளிவாகத்
தான் உரையாடி
கொண்டிருக்கிறாய்
நான் தான்
உளறிக் கொண்டிருக்கிறேன்
மனதுக்குள் உன்னோடு
காதலில்
 
இருளுக்குள் அடைக்கலம்
கொண்ட ஒளியாய்
தேடுகிறேன்
நானும் உன்னில்
அடைகலம்
 
ஆனந்தமோ ஆதங்கமோ
என் கண்ணீரும்
உனக்காக மட்டுமே
எப்போதுமே
 
நீ முறைத்தாலும்
காதல் தான்
என்று எனை
வார்த்தையிலும்
கவிழ்த்திடும்
கள்வன் நீ
 
கண்ணாடிக் குவளையாய்
பாதுகாக்குறேன்
நம் காதலை
உடைந்தால்
இருவருக்குமே ரணம்
உடைத்து விடாதே
 
ஒரு மரத்தில்
பல இலை
கிளைகளாய்
நீ என்பதில்
எத்தனை எத்தனை
நினைவு
அழகாய் மனதில்
 
வாசிப்பது நீயென்றால்
யோசிக்காமல் எழுதுவேன்
கண்களிலும்
மை கொண்டு
பல கவிதைகள்
 
உன் அழுத்தமான
முத்தம்
நீ எனக்கே
எனக்கென்று சொல்லாமல்
சொல்கிறது அன்பே
 
ஆள்தல் நீயென்றால்
வாழ்தலும் வரமே
காதல் ராஜ்ஜியத்தில்
 
நினைவோ நிஜமோ
உன்னுடனேயே தான்
என் பயணமும்
வாழ்க்கை முழுதும்
என்னாயுள் வரை
 
நெற்றி முத்தம்
உன் முதல் ஸ்பரிசம்
ஊடுருவுகிறது
மனமெங்கும்
நித்தம் விரல்
தொட்டிட பொட்டிட
 
நீ வா(சுவா)சிக்க
மட்டுமே
மலர்ந்தது இந்த
சிவப்பு ரோஜா
 
கொஞ்சம் வெளிச்சம்
கொஞ்சம் இரவு
கொஞ்சம் காற்று
கொஞ்சம் மழை
கொஞ்சம் பயணம்
கொஞ்சும் விரல்களில்
நிறைய காதல்
 
நிர்மலமான
இந்த உலகில்
நிறைந்தேயிருப்போம் வா
நீயும் நானுமாய்
 
தேடலில் தொலைவதும்
ஒருவித சுகம்தான்
நீயும் உணர்ந்திருப்பாய்தானே
அலையே
 
கனவின் மிச்சத்தை
உயிர்ப்பிக்காமல்
உணர்விண்றியே
உதயமாகிக் கொண்டுதானிருக்கிறது
ஒவ்வொரு விடியலும்
 
தொடர்வண்டி என்னதான்
வேகமாகச் சென்றாலும்
அதைவிட வேகமாக
பின்நோக்கியே செல்கிறது
மனது
 
உன் விரல்கள்
தீண்டவே
அடிக்கடி வியர்க்கிறது
என் விழிகள்
 
என் நிழலை
தோற்கடிக்கும்
இருளாயல்ல
அந்த நிழலுக்கு
உயிர்கொடுக்கும்
ஒளியாய் நீயே
 
உணர்ந்த தனிமை
உணராத வெறுமை
நடுவே சிக்கித் தவிக்குது
உன் நினைவெனும் அருமை
 
நீ தூரத்தே என்ற
துக்கம் இல்லை
பக்கத்தில் இல்லை என்ற
ஏக்கம் மட்டுமே
 
மண்ணில்
மறைந்திருக்கும் வேராய்
என்னுள்
உறைந்திருக்கும் நீ
 
நிலவுக்கே
போய் பார்த்து
சொன்ன பிறகுதான்
புரிந்தது தூரமாய்
இருந்து பார்த்தால்தான்
எல்லாம் அழகு என்று
 
சந்தோச தென்றல்
சன்னல் வழியே
சாமரம் வீசினாலும்
புலம் பெயர்தலின் வலி
பூக்கள் மட்டுமே அறியும்
 
உன்னுள் நான்
முழுநிலவுக்குள்
மூழ்கியிருக்கும்
மூன்றாம்பிறையாய்
 
இரும்பாக
இருந்த என்னையே
உருக வைத்து விட்டாயே
உன் உண்மை அன்பினால்
 
தொடுதிரையில்
உன் குறுஞ்செய்தி
இயல்பாகவே அரும்புகிறது
இதழில் குறுநகை
 
பகலில் வாழும்
நட்சத்திரங்களாய்
பரிணமிக்காமலேயே
போய்விடுகிறது
பக்குவப்பட்ட காதல்கள்
 
போகிற போக்கில்
அள்ளித்தெளித்தபடியே
செல்கிறது உனது சந்தம்
எனது சந்தோச தருணங்களை
 
அலைபாய்கிறது மனம்
உன் நினைவுகளை மட்டும் தேடி
முகவரி தொலைத்த கடிதமாய்
 
வசந்தகால தென்றலில்
உனைத் தேடியே
அலைபாய்கிறது
மனம் நந்தவனத்து
வண்ணத்துப்பூச்சியாய்
 
உண்மை காதல்
என்ன செய்யும்
உணர்வுகளில் கரைந்தே
ஊமையாகி உறைந்து நிற்கும்
 
மண்ணைப்
திறந்துகொண்டுவரும்
துளிரைப்போலவே
உனது மனதை
திறந்து வைத்த
வரிகளும் அழகு
 
வந்தவுடன் மறைந்துவிடும்
வானவில்லாய் அல்ல
நமதன்பு வளர்பிறைக்குள்
ஒளிந்திருக்கும் பௌர்ணமிநிலவு
 
திரும்பாத நாட்களின்
திரும்பிய பக்கமெல்லாம்
திரும்பத் திரும்ப
தீண்டிவிட்டுச் சென்றது
உனதன்பை மட்டுமே
 
சிக்கிமுக்கி
கற்களாய் விழிகள்
மோதிக் கொண்டதில்
சிதைந்து
போனதென்னவோ மொழிகள்
 
உன் பிரிவின் வெப்பத்தில்
ஆவியாகி விட்டது
கண்ணீர் குளம்
ஆகாயத்தை அண்ணாந்து
பார்த்து காத்திருக்கிறது
மீண்டும் உன் பிரிய
மழையில் நனைய
 
மழை முத்தமிட்டு எழுப்பும்
மண்வாசனையை போல
என் சுவாசக்காற்றை முத்தமிட்டு
என்னை எழுப்பிச் செல்கிறது
உன் யோசனை
 
உள்ளத்து உணர்வெல்லாம்
உனைக் கண்டதும்
ஊமையாகி
வெளிப்படுத்த முடியாமல்
வெட்க்கச்சாயம்
பூசிக் கொள்கிறது
என் முகம்
 
உன் விழி மொழி
எனக்கு புரியும்
என்ற போதும்
ஒரு முறையாவது
வாய் மொழியின்
 
உருகுவோம்
ஒன்றாகவே
அன்பெனும்
அக்னியில்
 
சில அஸ்த்தமனங்கள்
ஏனோ
விரும்புவதேயில்ல
விடியலை
 
முற்றுப்பெறாத மாலைதான்
என் முதல் காதலால்
மட்டுமல்ல
உன் முழுமையான
காதலாலும்
 
உன் அழைப்பென்றாலே
ஆனந்தம்
தான் மனதுக்கு
 
தீண்டலில்
காற்றையும்
மிஞ்சி விடுகிறாய்
நீ இதமான
நினைவாகி தென்றலாய்
 
சற்று கண் அசந்தாலும்
ஆழ்ந்து விடுகிறாய்
கண்ணுக்குள்ளும்
கனவாகவும் நீயே
 
என்னுலகம் பெரிதென்றாலும்
என்னுள்ளம்
வட்டமிட நினைப்பது
உன் மன வானில்
மட்டுமே
 
காணாமல் போன
என் புன்னகையும்
நொடியில் மலர்கிறது
உனை காணும்
போதுதான் மகிழ்வோடு
 
சிறு பொழுது
அருகிலிருந்தாலும்
முழு பொழுதையும்
உனதாக்கி விடுகிறாய்
அன்பில்
நிறைத்து மனதை
 
எப்படி யோசித்தாலும்
உனைத்தாண்டி
எதுவும் தோணுவதில்லை
என்பதே நிஜம்
என் சிந்தனையில்
 
பாதத்துக்கு பாலமாய்
வேண்டாம்
இதயத்துக்கு இதமாயிரு
போதும் அன்பே
 
ஆழ்நிலை தியானத்திலும்
ஜெபிக்கின்றது
உன் பெயரையே மனம்
காதல் வேதமாய்
 
உண்மை காதல்
உள்ளே நுழைந்தவுடன்
திரும்பவே
முடியாத சக்கரவியூகம்
 
கதிரவன்
கண் விழித்த
பின்னும்
உன் அணைப்பில்
கண் மூடி
கிடப்பதும்
சுகம் தான்
 
வெயில் வெப்பத்தின்
தாக்கத்தை விட
உன் உடலுடன்
இணையும் பொழுது
உருவாகும் தாக்கத்தில்
இன்பமான வெப்ப மயக்கத்தை
உருவாக்கின்றது
 
எதிர்பாரா மழை
உன்னிடம் நெருக்கத்தை
உருவாக்கியது
அணைத்து கொள்ளும்
பொழுது
உன் நெஞ்சோரம்
மெல்லிய
மலைப்பாதையில்
என் தலையணைத்து கொண்டேன்
 
எனதென்று
எதுவுமில்லை
நாமென்றான
பின் அன்பே
 
எப்போதோ
நினைக்கவில்லை
எப்போதும்
நினைத்திருப்பது
உனையே
 
சிறு விரல்
அழுத்தத்தில்
கொட்டி விடுகிறாய்
உன் அத்தனை
நேசத்தையும்
என் அன்பனே
 
என் ரசனையை
மறந்து
உன் ரசனையின்
ரசிகையாக
மாறினேன் நான்
 
நேசித்துக் கொண்டேயிரு
நான் சுவாசித்துக்
கொண்டே இருக்கின்றேன்
உன் காதல் மொழிகளை
 
மறைக்கின்றேன்
கண்களை சந்தித்தால்
தொலைத்திடுவேன்
உன் பார்வையில்
எனை என்றே
 
பூட்டிக் கொண்டேன்
உன்னில் என்னை
தொலைந்தாலும்
உன்னோடு
தான் என்றே
 
இந்த நேசம்
கூட புதுமை தான்
நித்தம் தொலைகிறதே
மனமும் உன்னில்
 
இளைப்பாறும் நொடியிலும்
துணையாக
வந்து விடுகிறாய்
நான் மனம் சாய
 
வெற்றிடம்
என்று ஏதுமின்றி
மனமெங்கும்
நிறைந்து விட்டாய்
என் சுவாசமாய்
 
அள்ளிக் கொள்கிறேன்
எனக்கான தாகமென
உன் நேசத்தை
 
பேசுகின்றது
உன் நினைவும்
கெஞ்சலும்
கொஞ்சலுமாய்
உனைப் போலவே
எனையும் மௌனமாக்கி
 
உன்னைத் தவிர
வேறெதுவுமேயில்லை
என் நினைவிடம்
 
விழிகள்
படம் பிடித்த
பிம்பம் மனதிலும்
இடம் பிடித்து விட்டது
அழகிய ஓவியமாய்
நீயாக
 
என் தனிமையைவிட
உன் வெற்றிடமே
அதிகம் வதைக்கிறது
எனை
நீயற்ற நொடிகளில்
 
முற்பிறவியின் பந்தமே
இப்பிறப்பிலும்
நாம் இணைந்தது
 
என் கனவுக்கும்
உயிருண்டு
கண்ணுக்குள்
நீயிருப்பதால்
காதலாய்
 
என்றென்றும் உயிர்த்துடிப்புடன்
வாடாமலும் உதிராமலும்
அன்புநீர் ஊற்றியது
நீயென்பதால்
 
உன்னில் தொலைய
தயங்குவதேயில்லை
உள்ளம் என்னிலையிலும்
 
நினைவுகளில்
உனை தொடரவிட்டு
நெருங்குகிறாய்
என் உள்ளத்தில்
காதலாய் நீ
 
தவித்திருப்பதும்
தனித்திருப்பதும்
உன் மொத்த
காதலையும்
அள்ளிக் கொள்ளவே
எனக்கே எனக்காக
என்று
 
தூரமிருந்து ரசிக்கிறேன்
பக்கமிருந்து தொலைத்த
உறவுகளை
 
என்னில்
தேங்கி கிடக்கும்
உன் நினைவில்
நீந்திக் கொண்டிருக்கு
என் காதலும்
கரை சேர்ப்பாய்
நீயென்றே
 
அருகிலில்லா
தருணங்களிலும்
இருப்பதாய்
எங்கும் நீ
 
மாயம் செய்கிறாய்
என்னில் ஆழ்ந்து
உன் காதலால்
 
உனை நினைவூட்டும்
அனைத்தும் எனக்கு
நம் காதல்
சின்னங்களே
துளிர்விடும்
 
அறிவேன்
உன் மனக்
கண்ணில்
என் உள்ளத்தை
உணர்வாய்
நீ என்று
 
என் மன நிறைவென்பது நீயன்றி வேறில்லை
 
தட்டி விட
விரும்ப வில்லை
ஒட்டிக் கொல்லும்
உன் நினைவுகளை
 
தொடரும் நிலவாய்
நீயும் தவழ்ந்து
கொண்டே இருக்கின்றாய்
என்னிதய
வானில் அழகாய்
 
எங்கும் நீ
எதிலும் நீ
என்று
ஏதோவொன்று
ஞாபகப்படுத்த
தவறியதில்லை
உன்னை
 
நாற்றோடு
கதை பேசும்
காற்றாய் மனதை
உரசுகிறாய்
நீ காதல்
மொழி பேசி
 
விரைந்தே மறைந்திடும்
மெல்லிய கோடு
தான் எப்போதும்
நம் ஊடல்கள்
மணலில் கிறுக்கிடும்

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

சிறகு

31 March, 2023, Fri 10:47   |  views: 390

சிறகு

31 March, 2023, Fri 10:47   |  views: 417

மழை

28 March, 2023, Tue 12:38   |  views: 978

மழலை

23 March, 2023, Thu 10:00   |  views: 1410

வெல்லும் தோல்விகளைக் கொல்...

20 March, 2023, Mon 9:15   |  views: 1913
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18