விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ரஷ்யாவின் உதவியின்றி இயங்க ஆரம்பித்த ஜெர்மனி - அதிரடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை

24 November, 2022, Thu 15:03   |  views: 4076

தனது எரிவாயுத் தேவைக்காக ஒரு காலத்தில் ரஷ்யாவையே பெருமளவில் சார்ந்திருந்தது ஜேர்மனி.

 
அதை பயன்படுத்திக்கொண்ட ரஷ்யா விளையாட்டுக் காட்டியது. கொஞ்சம் கொஞ்சமாக ஜேர்மனிக்கு வழங்கப்பட்ட எரிவாயுவைக் குறைத்துக் கொண்டே வந்த ரஷ்யா, ஒரு கட்டத்தில் முற்றிலும் எரிவாயு வழங்கலை நிறுத்திவிட்டது.
 
அடடா, குளிர்காலம் வரும் நேரத்தில் ரஷ்யா காலை வாரிவிட்டதே, மக்கள் குளிர்காலத்தை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்ற அச்சம் அரசுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் உருவானது.
 
இப்படிப்பட்ட ஒரு சூழலில், இனி ரஷ்யாவை சார்ந்திருக்கக்கூடாது என முடிவு செய்தது ஜேர்மனி. சொந்தக்காலில் நிற்க முடிவு செய்த ஜேர்மனி எரிவாயுத் தேவைக்காக எடுத்த அதிரடி நடவடிக்கைகளில் ஒன்று திரவ இயற்கை எரிவாயு.
 
அதாவது, இயற்கை எரிவாயுவை குளிர்வித்து திரவமாக்கி, தேவையான இடத்துக்கு அனுப்பி, அங்கு மீண்டும் அதை வாயு நிலைக்கு கொண்டுவந்து பயன்படுத்துவதுதான் ஒன்று திரவ இயற்கை எரிவாயு திட்டம்.
 
வழக்கமாக, இதுபோன்ற ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த பல ஆண்டுகளாகும். ஆனால், வெறும் 200 நாட்களில் இத்திட்டத்தை முடித்துக் காட்டியுள்ளது ஜேர்மனி.
 
இன்னொரு விடயம், இந்த திட்டத்துக்காக நிலப்பரப்பையும் வீணாக்காமல், கடலில் மிதக்கும் எரிவாயு உற்பத்தி மற்றும் சேமிப்பகத்தையும் உருவாக்கியுள்ளது ஜேர்மனி.
 
தன் மக்களின் எதிர்காலம் குறித்த அக்கறையும் உள்ளது ஜேர்மனிக்கு. அதாவது, திரவ இயற்கை எரிவாயுவும் புதைபடிவ தயாரிப்புதான். அதாவது பெட்ரோல், டீசல் போன்ற ஒன்றுதான்.
 
ஆக, அதற்கு மாற்றுத்திட்டம் ஒன்றும் ஜேர்மனியிடம் உள்ளது. அது பூமியை பாதிக்காத பசுமை ஹைட்ரஜன் எரிவாயு தயாரிக்கும் திட்டம். அது குறித்தும் யோசித்து வருகிறது ஜேர்மனி.
 
ஆனாலும், எதுவுமே இலவசமாக கிடைப்பதில்லையே. ஆக, பட்ஜெட்டில் கணக்கிட்டதைவிட, எரிவாயுவுக்காக இரண்டு மடங்கு செலவு ஏற்பட்டுள்ளதையும் மறுப்பதற்கில்லை!  
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18