விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி - அறந்திருக்க வேண்டிய தகவல்

19 November, 2022, Sat 11:49   |  views: 2593

2018ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி திரும்பியுள்ளது.

 
கத்தாரில் நடைபெறவுள்ள போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அடுத்த மாதம் 18ஆம் திகதி நிறைவடையும்.
 
அது பற்றிய சுவைத் தகவல்கள் சில....
 
ஆகச் செலவுமிக்க உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி
 
போட்டிக்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்க 300 பில்லியன் டொலர்செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
 
அது முந்தைய போட்டிகளுக்குச் செலவான தொகையை விட மிக அதிகம்.
 
பிரேசில் 2014 ஆம் ஆண்டு போட்டி - 11.5 பில்லியன் டொலர்
 
ரஷ்யா 2018ஆம் ஆண்டு போட்டி - 14 பில்லியன் டொலர்
 
மத்தியக் கிழக்கில் நடைபெறும் முதல் உலகக் கிண்ணப் போட்டி
 
மத்தியக் கிழக்கு வட்டாரத்திலும் அரபு வட்டாரத்திலும் அமைந்துள்ள நாட்டில் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது.
 
பனிக்காலத்தில் நடைபெறவிருக்கும் போட்டி
 
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும். அப்போது பெரும்பாலான நாடுகளில் கோடைக்காலமாக இருக்கும்.
 
இருப்பினும் அரபு வட்டாரத்தில் கோடைக்காலத்தில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும். அதனால் போட்டியைப் பனிக்காலத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
 
விளையாட்டு அரங்குகளில் குளிர்சாதன வசதிகள்
 
போட்டிகள் நடக்கவிருக்கும் 8 விளையாட்டு அரங்குகளில் 7இல் குளிர்சாதன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்குகளில் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாக இருப்பதை வசதிகள் உறுதிசெய்யும்.
 
குறுகிய போட்டி
 
பொதுவாக உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி 32 நாள்கள் நீடிக்கும். இம்முறை போட்டி ஐரோப்பாவில் நடைபெறும் காற்பந்துப் போட்டிகளுக்கு மத்தியில் இடம்பெறுவதால் அது 29 நாள்களுக்குச் சுருக்கப்பட்டுள்ளது.
 
மதுபானக் கட்டுப்பாடுகள் உள்ள நாட்டில் முதல்முறையாகப் போட்டி
 
இஸ்லாமிய நாடான கத்தாரில் மதுபானம் அருந்துவதோ விற்பதோ வழக்கம் இல்லை. பொது இடங்களில் மது அருந்துவதற்கும் தடை உள்ளது.
 
இருப்பினும் பொதுவாகச் சுற்றுப்பயணிகள் கூடும் இத்தகைய விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் அருந்துவது வழக்கம்.
 
இரண்டுக்கும் இடையே சமநிலையைக் காண கத்தார் முயற்சி எடுத்துள்ளது.
 
குறிப்பிட்ட சில இடங்களிலும் நேரங்களிலும் மட்டும் மதுபானங்களை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18