விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

click to view more

வேலையாள் தேவை

click to view more

வீடு வாடகைக்கு தேவை

click to view more

Appartement வாடகைக்கு

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

SHAMROCK EDUCATION CENTER

click to view more

Saajana Auto Lavage

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

சசிகலா ஆதரவுடன் தனிக்கட்சி? துவக்க பன்னீர் திட்டம்

23 September, 2022, Fri 8:23   |  views: 1386

சசிகலா ஆதரவுடன் தனிக் கட்சி துவங்கும் திட்டம் உள்ளிட்ட, மூன்று விதமான வாய்ப்புகள் தொடர்பாக, பன்னீர்செல்வம் தரப்பு ஆலோசித்து வருவதாக தெரிகிறது. பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பன்னீர் தரப்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பாதகமாக வருமானால், இது போன்ற திருப்பம் நிச்சயம் நேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் கமிஷனில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ள பழனிசாமி அணியின் அதிரடி ஆட்டத்தால், பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை சர்ச்சைக்கு இன்னும் முடிவு எட்டப்படாமல், சட்ட போராட்டங்கள் நீடித்து வருகின்றன. 'அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமியை தேர்வு செய்த பொதுக்குழு செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறார் பன்னீர்செல்வம்.


ஒற்றை தலைமை



இந்நிலையில், கட்சியின் சட்ட விதிகளை திருத்தி, பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் அடங்கிய புதிய பிரமாண பத்திரங்களை, பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தேர்தல் கமிஷனில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இரட்டை தலைமை முறையை ரத்து செய்து, ஒற்றை தலைமையை உருவாக்கும் தீர்மானம் மட்டுமின்றி, இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமியை தேர்வு செய்த தீர்மானத்திற்கும், பொதுக்குழு உறுப்பினர்களின் அமோக ஆதரவு இருப்பதாக, தேர்தல் கமிஷனில் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.


கடும் நெருக்கடி



அதற்கு ஆதாரமாக, பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்துள்ள பிரமாண பத்திரங்களையும், அவர் தாக்கல் செய்திருக்கிறார்.இந்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த பின், பொதுக்குழு தீர்மானங்களை ஏற்பதாக தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டு விட்டால், பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., செயல்படுவது உறுதியாகி விடும். இரட்டை இலை சின்னமும், பழனிசாமி தலைமையிலான கட்சிக்கு கிடைத்து விடும்.இந்த நிலை ஏற்படாமல் தடுப்பது குறித்து, பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களிடம் தீவிர ஆலோசனை நடத்தினார்.


அப்போது, பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, பழனிசாமி தரப்பில் தந்த பிரமாண பத்திரங்களை ஏற்கக்கூடாது என்றும், அது தொடர்பாக விசாரணை நடத்தக் கூடாது என்றும், தேர்தல் கமிஷனிடம் மனு கொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, பன்னீர்செல்வம் தரப்பில் எதிர் மனு தாக்கல் செய்த பின்னும், பழனிசாமி தரப்பு வாதங்களை, தேர்தல் கமிஷன் ஏற்கும் நிலை வந்தால், பன்னீர்செல்வத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படும்.


மூன்று விதமான முடிவுகள்



அதேபோல, உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீடு வழக்கிலும், பன்னீர்செல்வத்திற்கு பாதகமான தீர்ப்பு வருமானால், அவரது தரப்பினரின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும். இது போன்ற இக்கட்டான நேரத்தில், அவரால் மூன்று விதமான முடிவுகள் எடுக்க வாய்ப்புகள் உள்ளதாக, அவரது தரப்பினர் பட்டியலிடுகின்றனர்.

* முதல் வாய்ப்பு, சசிகலாவுடன் இணைந்து தனிக்கட்சி துவங்கும் திட்டம்

* இரண்டாவது, பழனிசாமியின் ஒற்றை தலைமையை ஏற்று, பழைய அதிகாரங்களை எல்லாம் விட்டுக் கொடுத்து, சமரசம் காணும் திட்டம்

* மூன்றாவது வாய்ப்பு, பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும், பா.ஜ.,வில் இணையும் திட்டம். இந்த மூன்று வாய்ப்புகளில், பன்னீர்செல்வம் எந்த வாய்ப்புக்கு முதலிடம் கொடுப்பார் என்பது, உச்ச நீதிமன்றம், தேர்தல் கமிஷன், பா.ஜ., மேலிடம் ஆகிய
முத்தரப்பு முடிவுக்கு பின்னரே தெரியவரும் என்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 08 02 68 21
SHAMROCK EDUCATION CENTER
பிரபல ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த சேவை
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18