விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

click to view more

வேலையாள் தேவை

click to view more

வீடு வாடகைக்கு தேவை

click to view more

Appartement வாடகைக்கு

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

SHAMROCK EDUCATION CENTER

click to view more

Saajana Auto Lavage

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு வலுக்கிறது! எதிர்ப்பு

21 September, 2022, Wed 4:36   |  views: 947

 ஹிந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசுவதால், தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மாநிலம் முழுதும் அவரை கண்டித்து, கடையடைப்பு, உருவ பொம்மை எரிப்பு என, பல்வேறு போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க., தலைவர்கள் அவ்வப்போது ஹிந்துக்களை, ஹிந்து மதத்தை, ஹிந்து கடவுள்களை வசைபாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். கட்சி தலைமையும் அதை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர், ஹிந்துக்கள் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து தெரிவிப்பதில்லை. இதை ஹிந்துக்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தனர். இந்த சூழ்நிலையில், தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக பேசி வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., - எம்.பி.,யுமான ராஜா, சமீபத்தில் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
அவர், 'ஹிந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை, நீ விபசாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்' எனப் பேசி இருந்தார்.


அவரது பேச்சுக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு, மாநிலம் முழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., - அ.ம.மு.க., உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஹிந்து முன்னணி, சிவசேனா உட்பட பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில், ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


சாலை மறியல்



மாநிலம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம், உருவ பொம்மை எரிப்பு என பல்வேறு வகையில், ஹிந்து அமைப்புகள் சார்பில், போராட்டங்கள் நடந்து வருகின்றன.
சென்னை மயிலாப்பூரில், நேற்று ஹிந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி சார்பில், சாலை மறியல் போராட்டம் நடந்தது; 13 பெண்கள் உட்பட, 35 பேரை போலீசார் கைது செய்தனர்.



கடையடைப்பு



ராஜா எம்.பி.,யாக உள்ள, நீலகிரி தொகுதியில், அவருக்கு கண்டனம் தெரிவித்து,நேற்று ஒரு நாள் கடையடைப்பு, வேலைநிறுத்த போராட்டம் நடத்த, ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, நீலகிரி லோக்சபா தொகுதியில் உள்ள ஊட்டி, குன்னுார், கூடலுார் சட்டசபை தொகுதிகளில், நேற்று காலை முதல், 80 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.கூடலுார் நகரில் கடைகள் திறப்பது தொடர்பாக, தி.மு.க.,வினருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. டி.எஸ்.பி., மகேஷ்குமார் தலைமையிலான போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
பந்தலுாரில் தி.மு.க.,வினர், வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியும், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. அப்போது, திறந்திருந்த கடை மீது, ஹிந்து முன்னணியினர் கற்களை வீசியதால், அலமாரி கண்ணாடி உடைந்தது.

தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி, அங்கு வந்த வியாபாரிகள், தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., செந்தில்குமார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினார்.குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில் தி.மு.க.,வினர் கடைகளை திறக்க வலியுறுத்தியதால், சலசலப்பு ஏற்பட்டது. கோத்தகிரி, குன்னுாரில் மினி பஸ்கள் இயங்கவில்லை.மாவட்டம் முழுதும், 80 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது; சாலைகள் வெறிச்சோடின. மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் தலைமையில், 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தி.மு.க.,வினர் கெஞ்சல்



அவிநாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, திருமுருகன்பூண்டி, அவிநாசி, சேவூர், கருவலுார், தெக்கலுார், பழங்கரை என, அனைத்து இடங்களிலும், பெட்டிக்கடை துவங்கி, ஹோட்டல், பேக்கரி, காய்கறி, மளிகை, துணிக்கடை என, 95 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல திறந்திருந்தன. கிராமப்புறங்களில் கடைகள், அங்கொன்றும், இங்கொன்றுமாக திறந்திருந்தன. திருப்பூர் எஸ்.பி., சஷாங் சாய் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அவிநாசியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில், தி.மு.க., நிர்வாகிகள், வியாபாரிகளை சந்தித்து, கடைகளை திறக்கும்படி கெஞ்சினர். ஆனால், வியாபாரிகள் கடைகளை திறக்க முன்வரவில்லை. ஹிந்துக்களுக்கு எதிரான பேச்சை தொடர்ந்தால், கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறிதான் என்பதை, ராஜாவுக்கு எதிரான போராட்டம், தி.மு.க.,வுக்கு உணர்த்தி உள்ளது.


லோக்சபா சபாநாயகரிடம் புகார்



ஹிந்துக்களை இழிவாகப் பேசிய, தி.மு.க., - எம்.பி., ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக பா.ஜ., - ஐ.டி., பிரிவு தலைவர் நிர்மல்குமார், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரமாண பத்திரமாக மனு அனுப்பி உள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

லோக்சபா ஒழுங்கு நடவடிக்கை விதிகளின் படி, எம்.பி.,க்கள் மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்க கோரும் புகார் மனுவை, சபாநாயகரிடம் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யலாம். அதை விசாரித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால், எம்.பி., சஸ்பெண்ட் செய்யப்படுவார்.
இது தவிர அவர், ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்கவும் தடை விதிக்கப்படும். பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யப்படும் புகார், விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 08 02 68 21
SHAMROCK EDUCATION CENTER
பிரபல ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த சேவை
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18