விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

click to view more

வேலையாள் தேவை

click to view more

வீடு வாடகைக்கு தேவை

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

SHAMROCK EDUCATION CENTER

click to view more

Saajana Auto Lavage

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

பூமியை நெருங்கும் சிறுகோள்: பாதிப்பை ஏற்படுத்துமா?

27 April, 2022, Wed 13:07   |  views: 8895

நாம் வாழும் பூமி கிரகமானது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உயிரினங்களை வளர்த்திருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் பேரழிவு நிகழ்வுகளையும் பூமித்தாய் எதிர்கொண்டிருக்கிறாள்.

 
பூமியை பல்வேறு சிறுகோள்கள் அவ்வப்போது தாக்கிவந்தாலும், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய ஒரு சிறுகோள் ஒரே அடியில் கிரகத்தில் உள்ள பெரும்பாலான உயிரினங்களை அழித்துவிட்டது. 
 
அந்த சிறுகோள் மோதலானது டைனோசர்கள் உட்பட பல உயிரினங்களை பூண்டோடு ஒழித்துவிட்டது. அந்த மாபெரும் அழிவுக்கு பிறகுதான் உலகில் பாலூட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்தது.
 
டைனோசர்களை அழித்த அளவு சக்தி கொண்ட மற்றொரு சிறுகோள் இதுவரை பூமியைத் தாக்காததால், நாம் இன்றும் மனித இனங்களில் ஒருவராக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
 
உண்மையில் அவ்வப்போது பிரபஞ்சத்தில் இருந்து பாறைகள் பூமியைக் கடந்து செல்கின்றன. அவற்றை உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஏஜென்சிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.
 
பூமியின் சுற்றுவட்டாரப் பகுதிக்குள் மிகப்பெரிய சிறுகோள் ஒன்று வரவுள்ளதாக தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) தெரிவித்துள்ளது. இந்த சிறுகோளுக்கு 418135 (2008 AG33) என பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்த சிறுகோள் அபாயகரமான சிறுகோள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. 450 மீட்டர் அகலம் கொண்ட இந்த சிறுகோள், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பாலத்துடன் ஒப்பிடப்படுகிறது. இது அப்பல்லோ வகுப்பு சிறுகோள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த சிறுகோள் வியாழக்கிழமை (2022 ஏப்ரல் 28) பூமியை நெருங்கி வர உள்ளது.
 
பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், சிறுகோள் பூமியை பெரிய அளவில் தாக்கப் போவதில்லை என்பது நல்ல செய்தி. உண்மையில் இந்த சிறுகோள், பூமியை நேருக்கு நேர் தாக்கினால், பூமியில் பரவலான அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு இது போதுமான சக்தியை கொண்டிருக்கிறது.
 
இந்த அபாயகரமான சிறுகோள், பூமியில் இருந்து 3,240,000 கிலோமீட்டர் தொலைவில் பறக்கும். இது மிகவும் அதிகமான தொலைவாயிற்றே, இதற்காகவா இவ்வளவு எச்சரிக்கை என்று நினைக்கலாம். பூமியில் இது மிகப் பெரிய தொலைவாக இருக்கலாம்.
ஆனால் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில்  3,240,000 கிலோமீட்டர் என்பது மிகவும் குறைவான தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சிறுகோள் (Asteroid) என்பது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களைப் போன்றவை, ஆனால் இவை கோள்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியவை.
 
வால் நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் விண்வெளியில் உள்ள பெரிய பாறைகள் சிறுகோள்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. 
இவை சூரியனை சுற்றி வருபவை என்றாலும், கிரகங்களின் ஈர்ப்பு விசையால் அவற்றின் சுற்றுப்பாதைகள் அவ்வப்போது மாறும்.
 
இவை ஏதேனும் ஒரு கிரகத்துடன் மோதும் போது பேரழிவை ஏற்படுத்தும். அதனால்தான், 150 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட சிறுகோள் பூமியை நெருங்கும்போது, அதை அபாயகரமான சிறுகோள் என்று வகைப்படுத்தும் நாசா, அதை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 08 02 68 21
SHAMROCK EDUCATION CENTER
பிரபல ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த சேவை
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18