விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

தன் குட்டிகளுக்கு சாப்பாடு வைத்ததற்காக தாய்க்கு நன்றி கூறிய நாய்

15 March, 2022, Tue 9:09   |  views: 8477

நாய்க்குட்டிகள் பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது, வீடுகளில் நாய்களை பிள்ளை போல வளர்த்து வருகின்றனர்.  அதே சமயம் தெருக்களில் இருக்கும் நாய்களை யாரும் கண்டுகொள்வதில்லை, அவைகள் உணவிற்கு தடுமாறுகின்றன.  

 
ஒரு பெண் தாயுணர்வோடு பசியில் தவித்து கொண்டிருக்கும் நாய்க்குட்டிக்கு உணவளித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பலரது இதயங்களையும் கவர்ந்து வருகிறது.  இதேபோல ஏற்கனவே முதியவர் ஒருவர் சைக்கிளில் உணவினை சுமந்து வந்து தெருக்களில் வசிக்கும் நாய்களுக்கு உணவளித்த வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 
ட்விட்டர் பக்கத்தில் யோகி என்கிற கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  இந்த வீடியோவுடன் "தாய் நாயானது தனது குட்டிகளுக்கு உணவளித்த பெண்ணுக்கு நன்றி கூறுகிறது" என்ற கேப்ஷனும் பதிவிடப்பட்டு இருக்கிறது.  
 
அந்த வீடியோவில் பெண் ஒருவர் தரையில் படுத்துக்கொண்டிருக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.  ஒரு பையில் உணவை வைத்துக்கொண்டு அந்த நாய்க்குட்டிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணவை அள்ளி போடுகிறார்.  அப்போது அவர் அருகில் நின்ற அந்த நாய்க்குட்டிகள் தாயானது அப்பெண்ணின் பின்னல் சுற்றிக்கொண்டே அவர் உணவு பரிமாறும்போது நன்றி கூறும் விதமாக அப்பெண்ணின் கைகளை பற்றிக்கொண்டு, முகத்தை அவர் கைகளில் பதிக்கிறது.
 
இந்த வீடியோ காண்போரின் இதயங்களை நெகிழ செய்துள்ளது.  மார்ச்-8ம் தேதி பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.  ஒரு பயனர் இந்த பெண்ணை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று கமெண்ட் செய்துள்ளார், மற்றொருவர் இது மனதை வருகிறது என்று கூறியுள்ளார்.  இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவிற்கு ஹார்ட் எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18