Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பாகிஸ்தான் 244 ஓட்டங்கள் முன்னிலை!

8 August, 2020, Sat 8:31   |  views: 374

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

 
இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 
ஆட்டநேர முடிவில், யாசிர் ஷா 12 ஓட்டங்களுடனும், மொஹமட் அபாஸ் ஓட்டமெதுவும் பெறாது நிலையில், ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
 
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டுவர்ட் பிரோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டொமினிக் பெஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
 
இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, கடந்த புதன்கிழமை மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் ஆரம்பமானது.
 
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஷான் மசூத் 156 ஓட்டங்களையும், பாபர் அசாம் 69 ஓட்டங்களையும், சதாப் கான் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
 
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஸ்டுவர்ட் பிரோட் மற்றும் ஜொப்ரா ஆர்செர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், டொம் பெஸ் மற்றும் ஜேம்ஸ் எண்டர்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
 
இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 219 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
இதன்போது ஒல்லி போப் 62 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
 
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், யாசிர் ஷா 4 விக்கெட்டுகளையும், மொஹமட் அபாஸ் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஷாயின் அப்ரிடி மற்றும் நயீம் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
 
இதனையடுத்து 107 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஓட்டங்களை பெற்றிருந்தது.
 
இன்னமும் இரண்டு விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காவது நாளை இன்று பாகிஸ்தான் அணி தொடரவுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்