விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

RATP நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட Jean Castex!!

RATP நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட Jean Castex!!

23 November, 2022, Wed 18:53   |  views: 5071

RATP தொடருந்து நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக (CEO) முன்னாள் பிரதமர் Jean Castex அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை அமைச்சர்கள் மாநாட்டின் போது அவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். RATP நிறுவனம் அண்மைய நாட்களில் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஊழியர்களின் வேலை நிறுத்தம், சாரதிகள் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களினால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து, அந்நிறுவனத்துக்கு நிர்வாக இயக்குனராக இருந்த Catherine Guillouard, கடந்த செப்டம்பரில் பதவி விலகியிருந்தார். அதைத் தொடர்ந்து புதிய நிர்வாக இயக்குனரை நியமிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

பிரான்சின் முன்னாள் பிரதமரான Jean Castex இனை அப்பதவிக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பரிந்துரை செய்திருந்தார். அரச பதவி வகித்த ஒருவர் ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவி வகிப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி/ சம்மதம் பெறவேண்டும். இந்நிலையிலேயே இன்று புதன்கிழமை Jean Castex இனை நிர்வாக இயக்குவராக அமைச்சர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18