எழுத்துரு விளம்பரம் - Text Pub

காதலியை கொன்ற வழக்கில் சிறைவைக்கப்பட்டிருந்த - கைதி தற்கொலை!

காதலியை கொன்ற வழக்கில் சிறைவைக்கப்பட்டிருந்த - கைதி தற்கொலை!

29 January, 2023, Sun 19:23   |  views: 5665

காதலிக்கு விஷம் வைத்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த கைதி சடலமாக காணப்பட்டார். குறித்த கைதி கடந்த வியாழக்கிழமையே சிறைசாலையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று காலை வழமையான பரிசோதனைகளை மேற்கொள்ளச் சென்றபோது, குறித்த 50 வயதுடைய கைதி இறந்து கிடந்துள்ளமை தெரியவந்துள்ளது. அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 19 ஆம் திகதி Catherine எனும் 46 வயதுடைய மருத்துவ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்திருந்தார். அவர் விஷம் உட்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படிருந்த நிலையில், இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தது.

அதையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கான விசாரணைகள் நிறைவடையும் முன்னர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18