விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

காவல்துறையினரை அச்சுறுத்திய நபர் மீது துப்பாக்கிச் சூடு!!

காவல்துறையினரை அச்சுறுத்திய நபர் மீது துப்பாக்கிச் சூடு!!

2 October, 2022, Sun 19:14   |  views: 2894

காவல்துறை அதிகாரியை ஆயுதம் மூலம் அச்சுறுத்திய நபர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் இரு வெவ்வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று, ஒக்டோபர் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் Vénissieux (Rhône) நகரில் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 5.30 மணி அளவில் rue Joannès Vallet வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து காவல்துறையினருக்கு அழைப்பு கிடைத்துள்ளது. நபர் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு கட்டிடம் ஒன்றுக்குள் நுழைய முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, இரவு நேர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சிலர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அதன்போதே மேற்படி துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆயுததாரி காவல்துறையினரை. நோக்கி சுட முற்பட்டதாகவும், பாதுகாப்பு கருதி காவல்துறையினர் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலேசான காயங்களுக்கு உள்ளான ஆயுததாரி கைது செய்யப்பட்டு, காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வர, மறுபக்கம் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் மீது IGPN (காவல்துறைக்கான காவல்துறையினர்) அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18