எழுத்துரு விளம்பரம் - Text Pub |
3 September, 2021, Fri 17:00 | views: 17204
Seine-et-Marne மாவட்டத்தில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு Poigny (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. மகிழுந்து ஒன்று அதிவேகமாக பயணித்துள்ள நிலையில், விபத்தை ஏற்படுத்தியுள்ளது. துவிச்சக்கர வண்டியில் வந்த சிறுவன் ஒருவன் மீது மகிழுந்து மோதி சிறுவனை தூக்கி வீசியுள்ளது.
தீயணைப்பு படையினரும், SAMU மருத்துவக்குழுவும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். Necker மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த சிறுவன் உயிருக்கு போராடி வருவதாக அறிய முடிகிறது.
மகிழுந்து சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டுட்டதுடன், மது உட்கொண்டுள்ளாரா என்பது குறித்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டது. அதில் எதிர்மறை முடிவுகளே வந்துள்ளது.
குறித்த வீதி 120 கிலோமீற்றர் பயணிக்கக்கூடிய வீதி எனவும், சிறுவன் திடீரென வீதியில் நுழைந்ததால் மகிழுந்தை நிறுத்த அவகாசம் கிடைக்கவில்லை எனவும் சாரதி குறிப்பிட்டதாக அறிய முடிகிறது.
![]() | அடுத்த ![]() |
|
![]() Chelles : பெண்ணை கடத்தி இரண்டுநாட்கள் பாலியல் வல்லுறவு மேற்கொண்ட நால்வர் கைது!!13 August, 2022, Sat 9:24 | views: 849
![]() ஈருந்துருளி விபத்து!! பெண் சாவு!!18 December, 2021, Sat 14:44 | views: 17348
![]() 🔴 மூன்றாவது தடுப்பூசிக்கான திகதி அறிவிப்பு!!26 August, 2021, Thu 10:00 | views: 17298
![]() கொரோனா தொற்று! - மருத்துவமனையில் தொடரும் நெருக்கடி!!9 August, 2021, Mon 20:46 | views: 17394
![]() சுகாதார அனுமதிச் சான்றிதழ் - மீண்டும் நிராகரிப்பு!!22 July, 2021, Thu 19:22 | views: 17530
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |