விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

ஈஃபிள் கோபுரத்தில் திருமணம் செய்துகொள்ள எவ்வளவு செலவாகும்..??

4 May, 2021, Tue 14:30   |  views: 2428

ஈஃபிள் கோபுரத்தில் திருமண மண்டபம் உள்ளது உங்கள் அனைவருக்கும் தெரிந்தே தான் இருக்கும். ஈஃபிள் கோபுரத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பது பலருக்கு ஆசையாகவும் உள்ளது. திருமணம் செய்துகொள்ள மண்டப வாடகை எவ்வளவு..?? இன்றைய பிரெஞ்சு புதினத்தில் தெரிந்துகொள்ளலாம். 
 
அதற்கு முன்பாக சில தகவல்கள். 
 
உங்களது திருமண அல்லது திருமண வரவேற்பு நிகழ்வு அதிகபட்சமாக 3 மணிநேரத்து மாத்திரமே அனுமதிக்கப்படும். அதிலும் நிகழ்வின் பின்னர் மண்பத்தை துப்பரவு செய்வதற்குரிய காலமும் இந்த 3 மணிநேரத்துக்குள் அடங்கும். 
 
இந்த காலத்தை நீங்கள் தாண்டினால்.. மீண்டும் அடுத்த 3 மணிநேரத்துக்குரிய பணத்தை செலுத்த நேரிடும். 
 
இங்கு திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தால்.. உணவுகளும் இங்கேயே பெற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் இருந்து கொண்டுவரும் உணவுகளுக்கு தடா!!
 
அதிலும் இந்த உணவு வகைகளில் ஆசிய உணவுகள் எதுவும் இல்லை.. குறிப்பாக சோறு, கறி.. பிரியாணி.. ம்ம்ஹூம்... எதுவும் இல்லை! (இப்பதான் தெரியுது தமிழாக்கள் ஏன் இங்க கல்யாணம் செய்யிறதில்லை எண்டு!)
 
மது.. அதுவும் கண்டிப்பாக அங்கேயே தான் வழங்கப்படும். (இடுப்பில் பியர் டின்னை ஒளித்து.. ம்ம்ஹூம்.! நடவாது!) 
 
சிகரெட் புகைப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ள அறையில் வைத்து தான் புகைக்க வேண்டும். 
 
மிக முக்கியமாக சத்தமாக பாட்டுகளை போட்டு, நாலு ஸ்டெப்பை போட்டு டான்ஸ் ஆடுலாம் என்றால்.. நடவாது.  DJ வேலைகளுக்கு இங்கு அனுமதி இல்லை. (என்னடாப்பா இது.?) 
 
ஆனால் டான்ஸ் ஏரியா என்று  ஒரு பகுதி உங்களுக்கு வழங்கப்படும். அதற்குள் ஒலிபரப்படும் சத்தம் அந்த அறைக்குள் மாத்திரமே கேட்கும். அங்கு சென்று இரண்டு ஸ்டெப்பை போட்டு திருமணத்துக்கு வந்த அந்த அழகான பெண்ணை கவர முயற்சிக்கலாம். (ஆனால் கல்யாணத்தை மூன்று மணிநேரத்துக்குள் மூட்டை கட்ட வேண்டும்!)
 
கேக் கட்டிங், பிறந்தநாள்.. வெற்றி கொண்டாட்டம் போன்றவற்றுக்கும் அனுமதி உண்டு. 
 
இத்தனை பிச்சல் புடுங்கலுக்கு மத்தியில் ஒரு கல்யாணம் தேவைதானே என்று தானே யோசிக்கின்றீர்கள்...?? 
 
சரி.. சரி.. கட்டணம்..? கட்டணம் என்னவோ கொஞ்சம் குறைவுதான். 
 
 யூரோக்களில் ஆரம்பிக்கும் முன்பதிவு, அதிகபட்சமாக யூரோக்கள் வரை செல்கின்றது. வெளியில் உள்ள சில திருமண மண்டபங்களோடு ஒப்பிடுகையில் இது குறைவுதான். ஆனால் மேற்கட்ட  ’கட்டுப்பாடுகளையும்’ கருத்தில் கொள்ளவேண்டும். 
 
யாராச்சும் இங்கு திருமணம் செய்ய தீர்மானித்திருந்தால் பரிஸ்தமிழ் அலுவலகத்துக்கு ஒரு இன்விடேஷனை அனுப்பி வையுங்கள்! 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி