நேற்று மாலை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு எதிராக பெரும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
Penhars (Quimper) நகரில் இந்த வன்முறை வெறியாட்டம் இடம்பெற்றுள்ளது. இருபது வரையான நபர்கள் அந்நகரத்தில் உள்ள காவல்துறையினரின் மகிழுந்துகள், தீயணைப்பு வீரர்களின் வாகனங்கள் என பலவற்றை அடித்து நொருக்கியதோடு, தீயிட்டும் கொழுத்தியுள்ளனர். Finistère நகர காவல்துறையினர் இச்செயலுக்கு பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். <<ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை இது>> என அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, 14 காவல்துறையினரின் மகிழுந்துகளும் குப்பைத்தொட்டிகளும் எரியூட்டப்பட்டன. தவிர மகிழுந்து சக்கரங்களையும் வீதியில் போட்டு கொழுத்தியுள்ளனர். தீயணைப்பு படையினர் வாகனங்களின் தீயை அணைக்க முற்பட்டனர்.
கைது செய்யப்பட்ட விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. வன்முறையாளர்களை ஜோந்தாமினர் தேடி வருகின்றனர்.