எழுத்துரு விளம்பரம் - Text Pub |
44. இந்த எண்ணைப் பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் எளிதாகப் பணம் சம்பாதிப்பர். பொதுமக்களுடைய ஆதரவால் சினிமா தியேட்டர், அச்சகம், நிலக்கரி, இரும்பு, மேசை நாற்காலிகள், வர்ணம் பூசுதல், விளையாட்டுச் சாமான்கள், பந்தயங்கள், பந்தயங்களை ஏற்பாடு செய்தல் போன்றவற்றால் அதிகப் பொருள் சேரும். பஸ், லாரி போன்றவற்றை வாடகைக்கு விடும் தொழில்களும் ஊதியமளிக்கும். தொழில் ஒருநாள் மூடப்பட்டு விடுவது நிச்சயம். தீயினால் ஆபத்து ஏற்படும். கட்டடங்கள் இடிந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படலாம். அரசாங்க விரோதமும், சிறைவாசமும் ஏற்படலாம். மனம் தீய வழிகளில் செல்லும். சிறைக்கு வெளியில் சுகவாழ்க்கை உண்டு. சிறைபடாவிட்டால் உடலில் நோய் ஏற்பட்டுத் துன்புறுத்தும்.